About Me

My photo
Jaffna, Jaffna, Sri Lanka

Followers

Monday, January 31, 2011

பேஸ்புக் மூடப்படலாம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


பேஸ்புக் மூடப்படலாம்!

பேஸ்புக் மூடப்படலாம்!

E-mailஅச்சிடுகPDF
இணையத்தளம் ஊடான சமூக வலைபின்னலான பேஸ்புக் மூடப்படலாம் என்று நம்பப்படுகின்றது. உலகில் இன்று மிகவும் பரவலாகப் பேசப்படும் ஒரு விடயமாக இது மாறியுள்ளது. 

மார்க் சுகர்பேர்க் என்பவரின் உருவாக்கம்தான் பேஸ் புக். பேஸ்புக்கின் ஸ்தாபகரும்,உரிமையாளருமான இவரே அதை மூடப்போவதாகவும் அறிவித்துள்ளமை தான் இந்த பரபரப்புக்குக் காரணம். 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பேஸ்புக்கை மூடப்போவதாக அறிவித்துள்ளார். 

பேஸ்புக் பல அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் அது கட்டுப்பாட்டை மீறிச் செல்வதாகவும், தனது தனிப்பட்ட வாழ்க்கையைக் கூட அது குழப்பியுள்ளதாகவும், மார்க் சுகர்பேர்க் அளித்துள்ள பேட்டியில் ஒப்புக்கொண்டுள்ளார். 

பல இலட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த இணையத்தள சமூக வலையமைப்பு 2011 மார்ச் 15ல் மூடப்படும் என தெரியவருகின்றது. 

பேஸ்புக் மூடப்படும் பட்சத்தில் அதில் பதிவாகியுள்ள படங்கள் மற்றும் தரவுகளை யாரும் அதற்குமேல் பார்க்க முடியாது. எனவே தனி நபர்கள் தங்களுக்குத் தேவையானவற்றை சேமித்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இந்த நிலையிலும் கூட சிலர் இது ஒரு வதந்தி என்றும் இதை நம்பத் தயாரில்லை என்றும் மறுத்து வருகின்றனர். பேஸ்புக் ஒரு உலகளாவிய வலைபின்னல்.

இதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை சுமார் 500 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 146 மில்லியன்பேர் அமெரிக்கர்கள். 

இரண்டாவது இடத்தில் 32 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டதாக இந்தோனேஷியா திகழ்கிறது

No comments:

Post a Comment