About Me

My photo
Jaffna, Jaffna, Sri Lanka

Followers

Saturday, January 29, 2011

மூன்று வேடங்களில் சூப்பர் ஸ்டா

மூன்று வேடங்களில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் ராணா… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Friday, January 28, 2011 at 8:45 pm | 1,323 views
மூன்று வேடங்களில் சூப்பர் ஸ்டார்… ராணா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் பெயர், ராணா.
இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் ரஜினி.
முத்து, படையப்பா ஆகிய ப்ளாக்பஸ்டர் படங்களுக்குப் பிறகு ரஜினியுடன் கைகோர்க்கும் கே எஸ் ரவிக்குமார் இயக்கும் இந்த ராணா, அனிமேஷன் படம் அல்ல… 100 சதவீத பொழுதுபோக்குகள் நிறைந்த ரஜினி படம்!
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில சப் டைட்டிலுடன் கூடிய வெளிநாட்டுப் பதிப்புகளாக வெளியாகிறது.
எந்திரன் தயாரிப்பு வாய்ப்பை நழுவவிட்ட ஈராஸ் என்டர்டெயின்மெண்ட், இந்த முறை பெரும் பொருட்செலவில் ஆக்கர் ஸ்டுடியோவின் துணை நிறுவனமான ஹரா பிக்சர்ஸுடன் இணைந்து ராணாவைத் தயாரிக்கிறது.
ரத்னவேல் ஒளிப்பதிவை கவனிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தொகுப்புக்கு ஆன்டனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.கலை இயக்கத்தை ராஜீவன் கவனிக்கிறார்.
ரஜினி ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனை அணுகியுள்ளனர்.
மூன்று முகம், ஜான் ஜானி ஜனார்தன் படங்களுக்குப் பிறகு ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் படம் ‘ராணா’தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவதார் போல இந்தப் படம் இருக்கும் என ரஜினியே முன்பு பேட்டியில் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
இந்தப் படம் குறித்து ஈராஸ் இன்டர்நேஷனலின் நிர்வாக இயக்குநர் சுனில் லுல்லா கூறுகையில், “இந்திய சினிமாவின் நிகரில்லாத சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கைகோர்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். முற்றிலும் வித்தியாசமான, முழு நீள ரஜினி படமாக ராணா உருவாகிறது. இந்திய சினிமா ரசிகர்களுக்கு இந்தப் படம் முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தைத் தரும்…”, என்றார்.
ராணாவின் தொழில் நுட்ப இயக்குநர் என்ற பொறுப்பேற்றுள்ள சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறுகையில், “ஈராஸ் நிறுவனத்துடன் இணைவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாக ராணா அமையும்,” என்றார்.
ராணாவின் தொழில்நுட்பப் பணிகளை ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஐக்யூப் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் கவனிக்கின்றனர். இந்த நிறுவனம் ஸ்பெஷல் எபெக்ட்ஸுக்காக எம்மி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
சுல்தான் ஹராவாக மாறி, பின்னர் ராணாவாக புதுப்பெயர் பெற்றது வரை இந்தப் படம் தொடர்பான தகவல்களை என்வழியில் எக்ஸ்க்ளூஸிவாக தெரிவித்து வந்திருக்கிறோம். இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்களை கடந்த ஜனவரி 10ம் தேதியே சிறப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
அந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது இன்று ராணா குறித்து வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.
ஈராஸ் நிறுவனம் மற்றும் படத்தின் மக்கள் தொடர்பு பொறுப்பை ஏற்றுள்ள ‘வி4′ இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பின் ஸ்கேன் வடிவம்:
http://www.envazhi.com/wp-content/uploads/2011/01/RaaNA.png

No comments:

Post a Comment